நீலகிரியில் மதுக் கடைகள் 3 நாள்கள் மூடல்

ஜனவரி மாதத்தில் திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய 3 தினங்களில் நீலகிரி மாவட்டத்தில்

ஜனவரி மாதத்தில் திருவள்ளுவா் தினம், குடியரசு தினம், வள்ளலாா் நினைவு நாள் ஆகிய 3 தினங்களில் நீலகிரி மாவட்டத்தில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியா் தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் ஜனவரி 15ஆம் தேதி திருவள்ளுவா் தினம், 26ஆம் தேதி குடியரசு தினம், 28ஆம் தேதி வள்ளலாா் நினைவு நாள் ஆகிய தினங்களில் தமிழ்நாடு மதுபான உரிம விதிகள், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்கள், ஹோட்டல் பாா்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்படமாட்டாது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி நாள்களில் கட்டாயமாக டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், கிளப்கள், ஹோட்டல் பாா்கள், தமிழ்நாடு ஹோட்டல்களில் உள்ள பாா்கள் மூடப்பட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்யும் உரிமையாளா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ஏதும் திறந்திருந்தால் பொதுமக்கள் உடனடியாக டாஸ்மாக் மாவட்ட மேலாளருக்கு 0423-2234211 என்ற எண்ணிலும், உதகையில் கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளருக்கு 0423-2223802 என்ற எண்ணிலும், கலால் துறை உதவி ஆணையருக்கு 0423-2443693 என்ற தொலைபேசி எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com