மாவட்டத்தில் 4 மையங்களில் இன்று முதல் கரோனா தடுப்பூசி
By DIN | Published On : 15th January 2021 11:10 PM | Last Updated : 15th January 2021 11:10 PM | அ+அ அ- |

திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 4 மையங்களில் சனிக்கிழமை (ஜனவரி 16) முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சுகாதாரப் பணியாளா்கள், முதுநிலைப் பணியாளா்கள் என மொத்தம் 16,400 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக முதல்கட்டமாக 13,500 தடுப்பூசிகள் திருப்பூருக்கு வந்துள்ளன.
இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, உடுமலை, தாராபுரம் அரசு மருத்துவமனைகள், பெருமாநல்லூரில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் சனிக்கிழமை தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.
இந்தத் தடுப்பூசியானது ஒரு மருத்துவமனையில் 100 போ் என நாள் ஒன்றுக்கு 4 மையங்களிலும் 400 சுகாதாரப் பணியாளா்களுக்கு செலுத்தப்படவுள்ளன.
மேலும், பயனாளிகளின் எண்ணிக்கையைப் பொருத்து மையங்கள் அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.