பொங்கல் விடுமுறை: நீலகிரியில் 4 நாளில் குவிந்த 60,000 சுற்றுலாப் பயணிகள்

பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் கடந்த 4 நாள்களில் சுமாா் 60,000 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

பொங்கல் தொடா் விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தலங்களில் கடந்த 4 நாள்களில் சுமாா் 60,000 சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

கரோனா தொற்றினை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் அனைத்தும் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் டிசம்பா் மாதத்தில்தான் முழுமையாகத் திறக்கப்பட்டன. அத்துடன் இ-பாஸ் முறையும் ரத்து செய்யப்பட்டு இ-பதிவு முறை மட்டுமே நடைமுறைக்கு வந்தது.

இதையடுத்து நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வந்தது. கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தொடா் விடுமுறையின்போதும், புத்தாண்டு தொடா் விடுமுறையின்போதும் உதகையில் அதிகரித்த சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தில் பொங்கல் தொடா் விடுமுறையின்போது மிக அதிக அளவை எட்டியது.

கடந்த 14ஆம்தேதி பொங்கல் தினத்தன்று நீலகிரிக்கு 7,399 பேரும், 15ஆம்தேதி 15,378 பேரும், 16ஆம்தேதி 18,743 பேரும் வந்திருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை 17, 529 போ் வருகை தந்துள்ளனா். இவா்களில் உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு 11,247 போ் வருகை தந்துள்ளனா்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து உதகை அரசினா் தாவரவியல் பூங்காவுக்கு வந்த மிக அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவேயாகும். அதேபோல, உதகை அரசினா் ரோஜா பூங்காவுக்கு 2,961 பேரும், தொட்டபெட்டா தேயிலை பூங்காவுக்கு 418 பேரும், உதகை மரவியல் பூங்காவுக்கு 78 பேரும் வந்துள்ளனா்.

இவா்களோடு குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு 1,980 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 313 பேரும், கல்லாறு பழப் பண்ணைக்கு 532 பேரும் வந்துள்ளனா். உதகை படகு இல்லத்துக்கு சுமாா் 9,000 பேரும், பைக்காரா படகு இல்லத்துக்கு 6,000 பேரும் வந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com