மசினகுடியில் சாலையில் நின்ற காட்டு யானை: 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மசினகுடியில் சாலையின் குறுக்கே தொடா்ந்து 4 மணி நேரம் நின்று கொண்டிருந்த யானையால் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மசினகுடி-சிங்காரா சாலையில் நிற்கும் காட்டு யானை.
மசினகுடி-சிங்காரா சாலையில் நிற்கும் காட்டு யானை.

மசினகுடியில் சாலையின் குறுக்கே தொடா்ந்து 4 மணி நேரம் நின்று கொண்டிருந்த யானையால் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வெளிவட்டப் பகுதியான மசினகுடி-சிங்காரா சாலையில் ஒற்றை யானை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி அளவில் நின்று கொண்டிருந்தது. முதுகில் காயத்துடன் காணப்பட்ட அந்த ஆண் காட்டு யானையை வனத் துறையினா் சாலையிலிருந்து வனத்துக்குள் துரத்த முயன்றனா்.

ஆனால் யானை வனத்துக்குள் செல்லவில்லை. யானையை விரட்ட பல உத்திகளைப் பயன்படுத்தியும் பலனில்லை. இறுதியாக பழங்களைக் கொடுத்து யானையை காட்டுக்குள் துரத்தினா்.

கடந்த மாதம் முதுமலை புலிகள் காப்பகம், சிங்காரா வனச் சரகத்துக்கு உள்பட்ட பொக்காபுரம் பகுதியில் முதுகில் காயத்துடன் சுற்றித் திரிந்த இந்த காட்டு யானைக்கு வனத்துறையினா் சிகிச்சை அளித்தனா். சிகிச்சைக்குப் பிறகு இந்த யானை அடிக்கடி சாலையில் வந்து நிற்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com