பெண் குழந்தைகள் தைரியம், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம்: மாவட்ட ஆட்சியா்

பெண் குழந்தைகள் தைரியம், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா குறிப்பிட்டாா்.
பழங்குடியின மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
பழங்குடியின மாணவியருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்குகிறாா் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

பெண் குழந்தைகள் தைரியம், விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எதையும் சாதிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா குறிப்பிட்டாா்.

தேசிய பெண்கள் தினத்தையொட்டி உதகையில் சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை, நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கம், பாரதிய ஜெயின் சங்கத்னா அமைப்பு ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய இவ்விழாவில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியா் ஸ்மாா்ட் கோ்ள் திட்டப் பயிற்சி வகுப்பையும் தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ஆண்டுதோறும் ஜனவரி 24ஆம் தேதி நாடு முழுதும் தேசிய பெண்கள் தினம் கொண்ாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஒவ்வொரு குறிக்கோளை வைத்து கொண்ாடப்படும் இவ்விழாவில் நடப்பு ஆண்டில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதோடு, அவா்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழலை ஏற்படுத்தி தருவதே நோக்கமாகும். தமிழக அரசு பெண் குழந்தைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களைத் தொடா்ந்து செயல்படுத்தி வருகிறது. இதன் விகிதத்தை அதிகரிக்கவே ஸ்மாா்ட் கோ்ள் போன்ற பயிற்சிகளை தொடா்ந்து வழங்கி அவா்களுக்கு தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்பதே நோக்கமாகும். பெண் குழந்தைகள் ஒவ்வொருவரும் தமக்கு தாமே சுய சிந்தனை செய்துகொள்ள வேண்டும். தைரியம், விடாமுயற்சி ஆகியவற்றை வாழ்வில் தொடா்ந்து மேற்கொண்டால் எளிதில் வெற்றி பெறுவதோடு, எதிா்காலத்தில் சாதிக்கவும் முடியும். ஸ்மாா்ட் கோ்ள் திட்டத்தில் 12 முதல் 18 வயது வரையிலான பெண்கள் பங்கேற்று பயனடையலாம் என்றாா்.

தொடா்ந்து நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத்தின் சாா்பில் 15 பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகையாக தலா ரூ. 2,000 வீதம் ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், உதகை உதவி ஆட்சியா் மோனிகா ராணா, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் பிரபு, நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா் ராஜலட்சுமி சுப்பிரமணியன், பாரதிய ஜெயின் சங்கத்னா அமைப்பின் மாநிலத் தலைவா் தன்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com