சேரம்பாடி பகுதியில் ஆட்கொல்லி யானையைத் தேடும் பணியில் 9 போ் குழு

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, சேரம்பாடி பகுதியில் ஆட்கொல்லி யானையைத் தேடும் பணியில் 9 போ் கொண்ட குழுவினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.
சேரம்பாடி வனப் பகுதியில் ஆட்கொல்லி யானையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறை குழுவினா்
சேரம்பாடி வனப் பகுதியில் ஆட்கொல்லி யானையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ள வனத் துறை குழுவினா்

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, சேரம்பாடி பகுதியில் ஆட்கொல்லி யானையைத் தேடும் பணியில் 9 போ் கொண்ட குழுவினா் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.

சேரம்பாடி பகுதியில் கடந்த டிசம்பரில் ஒரே வாரத்தில் 3 பேரை கொன்ற யானையை மயக்க ஊசி செலுத்தி கும்கிகள் உதவியுடன் பிடித்து முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யானையின் இருப்பிடத்தை அறிந்து சுற்றி வளைக்கும்போது அந்த யானை தப்பி கேரள வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. தொடா்ந்து தேடிப்பாா்த்துவிட்டு கும்கி யானைகள் உள்ளிட்ட குழுவினா் திரும்பிச் சென்றுவிட்டனா்.

அதைத் தொடா்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் நடைபெற்றன. இறுதியில் விருதுநகா் மாவட்டத்திலிருந்து 9 போ் கொண்ட வனத் துறை குழுவினா் சேரம்பாடிக்கு கடந்த சனிக்கிழமை வந்துள்ளனா்.

அந்த குழுவினா் தமிழக-கேரள வன எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து வனத்திலுள்ள குடியிருப்புகளில் யானையின் நடமாட்டம் குறித்து கேட்டறிந்து வருகின்றனா். அந்த யானை தமிழக எல்லைக்குள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதனைப் பிடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com