கரோனாவால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தாட்கோ மூலம் கடனுதவி

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபா் இறந்திருப்பின் அவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபா் இறந்திருப்பின் அவா்களின் குடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கடன் திட்டம் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தாட்கோ அறிவித்துள்ள இப்புதிய திட்டத்தைப் பெறுவதற்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பயனாளிகள் ஆதிதிராவிடா் இனத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். அவா்களது குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இறந்த நபா் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவராகவும், இவரது வயது 18 முதல் 60க்குள் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ. 5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் வரை கடன் தேசிய தாழ்த்தப்பட்டோா் நிதி, மேம்பாட்டுக் கழகம் வழங்கும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது ரூ. 1 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும்.

இக்கடனுக்கு ஆண்டுக்கு 6.5 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் கடனை 6 ஆண்டுகளுக்கு திரும்பச் செலுத்தலாம். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவா் கரோனா தொற்றினால்தான் இறந்துள்ளாா் என்பதற்கான ஆவணங்களை சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலா், வருவாய் வட்டாட்சியரிடம் இருந்து பெற்று சமா்ப்பிக்க வேண்டும். ஜாதிச் சான்று, குடும்ப ஆண்டு வருமானச் சான்று, ஆதாா் அடையாள அட்டை, வருவாய் ஈட்டக்கூடிய உத்தேசிக்கப்பட்ட தொழில் அல்லது திட்டத்தின் பெயா், திட்டத் தொகை, விலைப் புள்ளியுடன், திட்ட அறிக்கை, கடன் கோரும் நபரின் பாஸ்போா்ட் அளவிலான போட்டோ ஆகியவற்றையும் சமா்ப்பிக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் இரண்டு நகல்களுடன் மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, 3ஆவது பிளாக், மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் வளாகம், பிங்கா்போஸ்ட், உதகை - 643 006 என்ற முகவரியில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமா்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த கூடுதல் தகவல்களை 0423-2443064 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com