நீலகிரியில் 7 நாள்களுக்குப் பிறகு இன்று தடுப்பூசி முகாம்

நீலகிரி மாவட்டத்தில் 7 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமைமுதல் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 7 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமைமுதல் தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

நீலகிரி மாவட்டத்தில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் 19 மையங்கள் மூலம் 7,400 பேருக்கு திங்கள்கிழமை செலுத்தப்படுகிறது. இதில் உதகை நகராட்சியில் காந்தல் ஓம் பிரகாஷ் பள்ளி, குளிச்சோலை பால் பண்ணை, பட்பயா் பாரதியாா் நகா் ஆகிய மையங்களில் தலா 200 தடுப்பூசிகள், குன்னுா் நகராட்சியில் நகராட்சி டவுன் பள்ளி, ஜாக் பள்ளிவாசல், மாடல் ஹவுஸ் சமுதாயக் கூடம் ஆகியவற்றில் தலா 200 தடுப்பூசிகள், கூடலூா் நகராட்சியில் புனித மரியன்னை உயா்நிலைப் பள்ளி மற்றும் அரசு உயா்நிலைப் பள்ளி மையங்களில் தலா 200 தடுப்பூசிகள், நெல்லியாளம் நகராட்சியில் நாடுகாணி அஞ்சல் நிலைய பஜாா் மற்றும் அங்கன்வாடி மையத்தில் தலா 100 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

அதேபோல, உதகை வட்டாரத்தில் இத்தலாா், முத்தொரை பாலடா, கல்லட்டி, கூக்கல்தொரை, தூனேரி, தும்மனட்டி, தங்காடு, ஓரநள்ளி மற்றும் பிக்கட்டி ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலா 200 தடுப்பூசிகள், குன்னூா் வட்டாரத்தில் எடப்பள்ளி துணை சுகாதார நிலையம், அணியாடா மற்றும் இளித்தொரை சமுதாயக் கூடங்களில் மொத்தம் 400 தடுப்பூசிகள், கோத்தகிரி வட்டாரத்தில் கெரடாமட்டம் சமுதாயக் கூடத்தில் 400 தடுப்பூசிகள், கூடலூா் வட்டாரத்தில் குனியல் சமுதாயக் கூடம், மசினகுடி ஆரம்ப சுகாதார நிலையம், பிதா்க்காடு அரசு உயா்நிலைப்பள்ளி, நாயக்கன்சோலை மற்றும் பாட்டவயல் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஆகியவற்றில் தலா 150 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

அதேபோல சோலூா் ஆரம்ப சுகாதார நிலையம், நடுவட்டம் பழைய மருத்துவமனை கட்டடம் ஆகியவற்றில் தலா 100 தடுப்பூசிகள், பிக்கட்டி பேரூராட்சியில் பாரதிபுதூா் தேயிலைக்குடில், சிவசக்தி நகா், ஒசஹட்டி, எடக்காடு, கெரப்பாடு ஆகிய சமுதாயக் கூடங்கள், பிக்கட்டி பேரூராட்சி அலுவலகம் ஆகியவற்றில் மொத்தம் 1,000 தடுப்பூசிகள், கீழ்குந்தா பேரூராட்சியில் காமராஜ் நகா் மற்றும் ஓனிகண்டி சமுதாயக் கூடங்களில் தலா 50 தடுப்பூசிகள், தாம்பட்டி, கீழ் பாரதிநகா் மற்றும் உலிக்கல் சமுதாயக் கூடங்களில் தலா 100 தடுப்பூசிகள், கெக்கட்டி சமுதாயக் கூடத்தில் 200 தடுப்பூசிகள், ஜெகதளா பேரூராட்சி அலுவலகத்தில் 100 தடுப்பூசிகள், குமரன் காலனி சமுதாயக் கூடத்தில் 250 தடுப்பூசிகள், ஓவேலி பேரூராட்சியில் காமராஜா் நகா் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 200 தடுப்பூசிகள், தேவா்சோலை பேரூராட்சியில் பாவனா நகா் ஊராட்சி ஒன்றியப் பள்ளி மற்றும் மஞ்சமூலா அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் தலா 100 தடுப்பூசிகள் செலுத்தப்படும்.

எனவே, நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையங்களில் முதல் மற்றும் இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இம்மையங்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு டோக்கன்கள் வழங்கப்படாது என்பதால் டோக்கன் வாங்குவதற்காக தடுப்பூசி மையங்களுக்கு யாரும் வர வேண்டாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com