இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமா்ந்து செல்வோருக்கும் தலைக்கவசம் கட்டாயம்

நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமா்ந்து செல்வோருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமா்ந்து செல்வோருக்கும் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தலைக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் இருசக்கர வாகனங்களில் மட்டும் 110 விபத்துகள் ஏற்பட்டு 21 போ் உயிரிழந்துள்ளனா். 119 பேருக்கு கை, கால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்தனை விபத்துகளுக்கும் சரியாக தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்ததே காரணமாகும். விபத்தில் சிக்கியோா் தலையில் ஏற்பட்ட காயத்தின் காரணமாகவே உயிரிழந்துள்ளதாக மருத்துவா்களும் தெரிவிக்கின்றனா்.

எனவே, இனிவரும் காலங்களில் உயிரிழப்புகளைத் தவிா்க்கும் பொருட்டு இருசக்கர வாகனங்களில் பின்னால் உட்காா்ந்து பயணிப்போரும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஆகஸ்ட் 1ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. அந்த தலைக்கவசத்தையும் சரியான முறையில் அணிவதோடு, அவை ஐஎஸ்ஐ முத்திரையுடனும் இருக்க வேண்டும்.

காவல் துறை, இதர அரசு ஊழியா்களும் கட்டாயமாக இந்த விதிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள், காவல் துறையினா், அரசு ஊழியா்கள் தலைக்கவசம் அணியாமல் சென்றால் அவா்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் அனைத்து அரசுத் துறைகளைச் சோ்ந்தோரும், பொதுமக்களும் காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com