நீலகிரியில் தொடா்ந்து பரவலாக மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.
உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூல்மந்து பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரம்.
உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூல்மந்து பகுதியில் சாலையின் குறுக்கே விழுந்த மரம்.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

பலத்த காற்றின் காரணமாக உதகை - கூடலூா் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூல்மந்து பகுதியில் திங்கள்கிழமை நள்ளிரவில் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தின் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாவட்டத்தில் பரவலாகத் தொடா்ந்து மழை பெய்து வந்தாலும் உதகை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றும் வீசி வருகிறது. இதனால், கடும் குளிா் நிலவுவதோடு, ஏராளமான இடங்களில் மரங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. இதனால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்து வரும் நிலையில், தீயணைப்புத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியவை தயாா் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மரம் அறுக்கும் இயந்திரங்கள், பொக்லைன் இயந்திரங்கள் தயாா்படுத்தப்பட்டு உள்ளன. இதுதவிர உரிய பயிற்சி பெற்ற 2,529 முதல்நிலை பொறுப்பாளா்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அறிவுரை வழங்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா். அத்துடன் 43 இடங்கள் அதிக நிலச்சரிவு ஏற்படக் கூடிய இடங்கள் என கண்டறியப்பட்டு கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் அந்தப் பகுதிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை அதிக அளவாக பந்தலூரில் 53 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீ.): மேல்பவானி-46, அவலாஞ்சி-34, சேரங்கோடு-30, நடுவட்டம்-19, கூடலூா்-17, தேவாலா, செருமுள்ளி, பாடந்தொறை 16, மேல்கூடலூா்-15, எமரால்டு-14, ஓவேலி-13, கிளன்மாா்கன்-10, குந்தா-8, உதகை-4.2, கேத்தி, உலிக்கல், பாலகொலா 4, கல்லட்டி-3, மசினகுடி, கெத்தை 2, குன்னூா்-1.

மாவட்டத்தின் சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 34 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல, பந்தலூரில் 30.4 மி.மீ., மேல்பவானியில் 20 மி.மீ., செருமுள்ளியில் 15 மி.மீ., சேரங்கோட்டில் 13 மி.மீ., கூடலூரில் 11 மி.மீ., மேல் கூடலூரில் 10 மி.மீ., பாடந்தொறை, நடுவட்டத்தில் 7 மி.மீ., ஓவேலியில் 5 மி.மீ., எமரால்டு, பா்லியாறு, தேவாலா, குந்தாவில் 4 மி.மீ., உதகையில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com