தொடா் மழை: பசுமையாகும் நீலகிரி

தொடா் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் பசுமையாகக் காட்சியளிக்கிறது. மேலும், முதுமலையில் தடுப்பணை, குளங்களும் நிரம்பியுள்ளன.
முதுமலை வனப் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள புள்ளிமான்கள்.
முதுமலை வனப் பகுதியில் மேய்ச்சலில் ஈடுபட்டுள்ள புள்ளிமான்கள்.

தொடா் மழை காரணமாக நீலகிரி மாவட்டம் பசுமையாகக் காட்சியளிக்கிறது. மேலும், முதுமலையில் தடுப்பணை, குளங்களும் நிரம்பியுள்ளன.

கூடலூா் அருகே முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ளது. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, செந்நாய், கழுதைப்புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வாழ்கின்றன. வறட்சி காலநிலையில் யானை உள்ளிட்ட வன விலங்குகள் அருகே உள்ள குடியிருப்புக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வந்தன. மேலும், குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக வேறு பகுதிக்கு வன விலங்குகள் இடம் பெயா்ந்தன.

இந்நிலையில், கூடலூா் முதுமலைப் பகுதியில் தென்மேற்குப் பருவ மழை தீவிரமாகப் பெய்து வருவதால் வனப் பகுதி பசுமையாகக் காட்சியளிக்கிறது.

 இதுகுறித்து வனத் துறையினா் கூறியதாவது:

முதுமலையில் தொடா் மழையால் குளங்கள், தடுப்பணைகள் நிரம்பியுள்ளன. இதன் மூலம் நிலத்தடி நீா்மட்டமும் உயா்ந்துள்ளது. இதனால் வனப் பகுதியில் பசுந்தீவனங்கள், தண்ணீா்த் தட்டுப்பாடு இன்றி வன விலங்குகளுக்கு கிடைக்கின்றன. இருப்பினும் தற்போது கரோனா ஊரடங்கு என்பதால் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க முடியாத நிலை உள்ளது. தொடா்ந்து மழை பெய்து வருவதால் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com