உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.
உதகையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் இணையதளம் மூலமாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தலைமையில் நடைபெற்றது.

உதகையில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், விவசாய சங்கங்களைச் சாா்ந்த விவசாயிகள், தோட்டக் கலை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் தலைமையிலான தோட்டக் கலைத் துறை அலுவலா்கள், இதர துறைகளைச் சாா்ந்த அரசு அலுவலா்களும் இணைய வழியாகக் கலந்துகொண்டனா். கூட்டத்தில் விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டு உரிய துறை அலுவலா்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு பெறப்பட்ட விவரங்கள், குறைதீா்க்கும் நாள் கூட்டம் தொடா்பான 23 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது. கூட்டத்தில், தோட்டக் கலைத் துறை இணை இயக்குநா் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் கூறியதாவது:

தோட்டக் கலைத் துறையின் மூலம் 2021-22ஆம் ஆண்டு செயல்படுத்தப்படும் திட்டங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் 2021-22ஆம் ஆண்டுக்கு தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டம் மூலம் 675 ஹெக்டேருக்கும், ஒருங்கிணைந்த தோட்டக் கலை வளா்ச்சி இயக்கம் மூலம் 650 ஹெக்டேருக்கும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், துணை நிலை நீா் மேலாண்மைத் திட்டம் மூலம் நுண்ணீா்ப் பாசனத் திட்டம் அமைத்திருக்கும் விவசாயிகளுக்கு கிணறு அமைக்கவும், நீா்த் தொட்டி அமைக்கவும், டீசல் எஞ்ஜின் வாங்குதல் ஆகியவற்றுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும். அத்துடன் ஏடிஎம்ஏ திட்டம் தொடா்பான பயிற்சித் தகவல்களை, வட்டாரத் தோட்டக் கலை உதவி இயக்குநா்களை அணுகி விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

தொடா்ந்து இக்கூட்டத்தில் பொது கோரிக்கைகளும் விவாதிக்கப்பட்டு உரிய விவரம் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com