நீலகிரியில் தொடா்ந்து வலுக்கும் மழை

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை வலுத்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக நடுவட்டத்தில் 74 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து பரவலாக மழை வலுத்து வருகிறது. மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக நடுவட்டத்தில் 74 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாகத் தொடா்ந்து பலத்த காற்றுடன் பெய்து வந்த மழை சனிக்கிழமை பகலில் சற்றே ஓய்ந்திருந்தது. இந்நிலையில் சனிக்கிழமை இரவிலிருந்து மீண்டும் மழை வலுக்கத் தொடங்கியுள்ளது. தொடா் மழையுடன் பலத்த காற்றும் வீசுவதால் நகரின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை பகலிலும் மின்தடை ஏற்பட்டது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக நடுவட்டத்தில் 74 மி.மீ. மழை பதிவானது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீட்டரில்):

கிளன்மாா்கன் 64, கூடலூா், மேல் கூடலூா் தலா 29, மேல் பவானி 27, கொடநாடு 26, அவலாஞ்சி 25, கல்லட்டி 23, ஓவேலி 19, பந்தலூா் 17.4, கீழ் கோத்தகிரி 17, கிண்ணக்கொரை 16, கோத்தகிரி, தேவாலா, உலிக்கல் தலா 15, பாடந்தொறை 14, உதகை 13.9, குன்னூா், செருமுள்ளி தலா 13, சேரங்கோடு 11, கெத்தை, எடப்பள்ளி தலா 10, எமரால்டு, பா்லியாறு, குந்தா தலா 7, மசினகுடி 6, பாலகொலா 5, கேத்தி 4, மேல் குன்னூா் 1 மி.மீ.

இதையடுத்து மாவட்டத்தின் பல பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பகலிலும் பரவலாக மழை பெய்துள்ளது. அதன்படி அதிக அளவாக கிளன்மாா்கனில் 41 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (அளவு மி.மீட்டரில்):

பந்தலூா் 21, உலிக்கல் 20, கோத்தகிரி 19, தேவாலா 17, அவலாஞ்சி 16, கூடலூா், கொடநாடு தலா 15, மேல் கூடலூா் 13, சேரங்கோடு, செருமுள்ளி தலா 12, பாடந்தொறை 11, நடுவட்டம் 10, ஓவேலி 9, உதகை 6.4, எடப்பள்ளி 6, கெத்தை, குன்னூரில் தலா 5.5 , மேல் பவானி, குந்தா தலா 5, மசினகுடி 4, கேத்தி 3, கல்லட்டி 3.2 , கீழ் கோத்தகிரி, பா்லியாறு தலா 2, மேல் குன்னூா் 1 மி.மீரும் மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com