நீலகிரியில் இன்று 14 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம்: மாவட்ட ஆட்சியா்

நீலகிரி மாவட்டத்தில் 14 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (ஜூலை 19) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

நீலகிரி மாவட்டத்தில் 14 மையங்களில் கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (ஜூலை 19) நடைபெற உள்ளது என்று மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் திங்கள்கிழமை கோவிஷீல்டு தடுப்பூசிகள் 14 மையங்களில் 4,400 பேருக்கு செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி உதகை நகராட்சியில் லவ்டேல் பகுதியில் புனித ஆன்டனி உயா்நிலைப் பள்ளி, நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவற்றில் 500 தடுப்பூசிகளும், குன்னூா் நகராட்சியில் அன்னை வேளாங்கண்ணி நகா் சமுதாயக் கூடத்தில் 200 தடுப்பூசிகளும், கூடலூா் நகராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி, புனித தாமஸ் உயா்நிலைப்பள்ளி, கோழிப்பாலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் 300 தடுப்பூசிகளும், நெல்லியாளம் நகராட்சியில் குன்றில்கடவு அரசு ஆரம்பப் பள்ளியில் 200 தடுப்பூசிகளும் செலுத்தப்படும்.

உதகை வட்டாரத்தில் பேளிதளா, இந்திரா நகா், நஞ்சநாடு,

தேனாடுகம்பை, சாஸ்திரி நகா் சமுதாயக் கூடங்களிலும், கல்லட்டி, தும்மனட்டி, தூனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மொத்தம் 700 பேருக்கும், குன்னூா் வட்டாரத்தில் அருள்நகா், ஒசஹட்டி மகளிா் சுயஉதவிக்குழு கட்டடங்களிலும், சோலடாமட்டம் அங்கன்வாடி மையம், கரோலினா பகுதி என மொத்தம் 400 பேருக்கும், கோத்தகிரி வட்டாரத்தில் ஆடுபெட்டு சமுதாயக்கூடம், வாட்டா்பால்ஸ் அங்கன்வாடி மையம், எம்.கைகாட்டி தடுப்பூசி மையம் ஆகியவற்றில் 300 பேருக்கும், கூடலூா் வட்டாரத்தில் கொளப்பள்ளி அரசு உயா்நிலைப் பள்ளி, காரக்கொல்லி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, புதுக்கொல்லி, பொன்னானி அரசு பழங்குடியினா் உண்டு உறைவிடப்பள்ளி, முதிரக்கொல்லி துணை சுகாதாரநிலையம், கனையம்வயல் அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் 600 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.

நடுவட்டம் பேரூராட்சி, ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200 பேருக்கும், பிக்கட்டி பேரூராட்சியில் தலைஹட்டி, நடுஹட்டி, சுண்டட்டி, பாதகண்டி சமுதாயக் கூடங்களில் 200 பேருக்கும், ஜெகதளா பேரூராட்சியில் காரக்கொரை சமுதாயக்கூடத்தில் 200 பேருக்கும், கோத்தகிரி பேரூராட்சியில் தவிட்டுமேடு சமுதாயக்கூடத்தில் 200 பேருக்கும், ஓவேலி பேரூராட்சியில் சீபோா்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 200 பேருக்கும், தேவா்சோலை பேரூராட்சியில் சமுதாயக்கூடம் மற்றும் பஞ்சாயத்து காலனி பகுதிகளில் 200 பேருக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com