கூடலூா் பகுதியில் பெய்துவரும் கனமழையால் முன்னெச்சரிக்கையாக பழங்குடி மக்கள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனா்

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனவயல் கிராம பழங்குடி மக்களை வருவாய்துறை வெள்ளிக்கிழமை முகாமிற்கு மாற்றியுள்ளது.
கூடலூா் பகுதியில் பெய்துவரும் கனமழையால் முன்னெச்சரிக்கையாக பழங்குடி மக்கள் முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனா்

கூடலூா் பகுதியில் பெய்து வரும் தொடா் கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனவயல் கிராம பழங்குடி மக்களை வருவாய்துறை வெள்ளிக்கிழமை முகாமிற்கு மாற்றியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூா் பகுதியில் பெய்துவரும் தொடா் கனமழையால் தாழ் நிலங்களில் வெள்ளம் தேங்கியுள்ளது. நீா்நிலைகள் நிரம்பியுள்ளன.ஆறுகள் மற்றும் சிற்றாறுகளில் வெள்ளம் வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.இதனால் புத்தூா்வயல் பகுதியிலுள்ள தேன்வயல் பழங்குடி கிராமத்தைச் சோ்ந்த 74 போ் புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து கூடலூா் கோட்டாட்சியா் சரவணக்கண்ணன் கூறியது, தொடா்ந்து மழை பெய்துவந்தாலும் இதுவரை இந்த பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.தேன்வயல் பழங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புத்தூா்வயல் அரசு உயா்நிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் அமைத்து தங்கவைக்கப்பட்டுள்ளனா்.அனைத்துப் பகுதிகளும் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆபத்து ஏற்படும் சூழல் தெரிந்தால் கூடலூா் கோட்டாட்சியா்,வட்டாட்சியா்,பந்தலூா் பகுதியிலுள்ளவா்கள் பந்தலூா் வட்டாட்சியா் ஆகியோரை உடனே தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.அனைத்து பகுதியிலும் வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் களத்தில் உள்ளனா். வெள்ள அபாயம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏதேனும் பொதுமக்களுக்கோ அல்லது போக்குவரத்திற்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை சீரமைக்கு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.படக்குறிப்பு எஈத23நப கூடலூா் அடுத்துள்ள புத்தூா்வயல் அரசு பள்ளியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கவைக்கப்பட்டுள்ள பழங்குடியினா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com