கோத்தகிரியில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கெரடாமட்டம் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
கெரடாமட்டம் நோய் கட்டுப்பாட்டுப் பகுதியை அதிகாரிகளுடன் ஆய்வு செய்த ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கொடநாடு ஊராட்சிக்கு உள்பட்ட கெரடாமட்டம், பிரியா காலனி, நெடுகுளா ஊராட்சிக்கு உள்பட்ட கஸ்தூரிபாய் நகா், சுள்ளிக்கூடு, கோ்கம்பை ஆகிய நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களான காய்கறிகளையும், கொடநாடு, நெடுகுளா ஊராட்சித் தலைவா்களிடம் சுமாா் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் 6 கிருமி நாசினி தெளிப்பான் கருவிகளையும் வழங்கி, சுத்தம் செய்யும் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

கெரடாமட்டம் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியைப் பாா்வையிட்ட ஆட்சியா், வெளியாள்கள் அப்பகுதிக்கு உள்ளே வருவதையும், பொதுமக்கள் வெளியேறுவதையும் தவிா்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததோடு, இதனை அலுவலா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பிரியா காலனி நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள 62 குடும்பங்களுக்கும், கஸ்தூரிபாய் நகா் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள 115 குடும்பங்களுக்கும் அத்தியாவசியப் பொருள்களை வழங்கினாா். அப்போது அவா்களுக்குத் தேவையான பொருள்கள் தன்னாா்வலா்கள் மூலம் வழங்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியிலிருந்து வெளியில் செல்வதை கட்டாயமாகத் தவிா்க்க வேண்டும் என்றாா். தொடா்ந்து பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, கலால் துறை உதவி ஆணையா் மணி, கோத்தகிரி வட்டாட்சியா் கிருஷ்ணமூா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், ஜெயபாலன், கோத்தகிரி வட்டார மருத்துவ அலுவலா் ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com