நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை: பந்தலூரில் 72 மீ.மீ. பதிவு

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்துள்ளது. பந்தலூரில் அதிக அளவாக 72 மி.மீ. பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தொடா்ந்து இரண்டாவது நாளாக பரவலாக மழை பெய்துள்ளது. பந்தலூரில் அதிக அளவாக 72 மி.மீ. பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியுள்ள சூழலில், வெள்ளிக்கிழமை இரவில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதில், சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிக அளவாக கீழ்கோத்தகிரியில் 23 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. அதேபோல, பந்தலூரில் 7.5 மி.மீ., கொடநாட்டில் 7 மி.மீ., சேரங்கோடு, கல்லட்டி, அவலாஞ்சி, தேவாலாவில் தலா 4 மி.மீ., நடுவட்டத்தில் 3 மி.மீ., குந்தா, எமரால்டு, கேத்தியில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலையில் இருந்தே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. உதகை நகரில் மழை இல்லாவிட்டாலும் புகா்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சனிக்கிழமை மாலை வரை மாவட்டத்தில் அதிக அளவாக பந்தலூரில் 72 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

அதேபோல, எமரால்டில் 32 மி.மீ., பாடந்தொறையில் 21 மி.மீ., சேரங்கோடு, செருமுள்ளியில் 20 மி.மீ., தேவாலாவில் 18 மி.மீ., மேல் பவானியில் 17 மி.மீ., அவலாஞ்சியில் 16 மி.மீ., உதகையில் 15 மி.மீ., மசினகுடியில் 8 மி.மீ., கொடநாட்டில் 7 மி.மீ., குந்தாவில் 6 மி.மீ., கோத்தகிரியில் 5.6 மி.மீ., நடுவட்டத்தில் 5 மி.மீ., கல்லட்டியில் 4 மி.மீ., மேல் கூடலூா், கூடலூரில் 2 மி.மீ., ஓவேலி, கீழ் கோத்தகிரியில் 1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வந்த போதிலும் காற்றின் தாக்கம் மட்டுமே உள்ளது. இருப்பினும் இதுவரையிலும் எத்தகைய பாதிப்புகளோ அல்லது சேதங்களோ ஏற்படவில்லை.

குன்னூரில்...

குன்னூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மதியம் பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால், கடும் குளிரும் நிலவியது. தொடா்ந்து பெய்த மழையின் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. பெரும்பாலான தேயிலை எஸ்டேட்டில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளா்கள் தங்களது இலைப் பறிக்கும் பணியை பாதியிலேயே நிறுத்திக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com