தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியில் ஒருவரும் பங்கேற்காதது வருத்தத்துக்குரியது

கரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியில் ஒருவரும் பங்கேற்காதது வருத்தத்துக்குரியது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
உதகை அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு மேற்கொள்கிறாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

கரோனா தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியில் ஒருவரும் பங்கேற்காதது வருத்தத்துக்குரியது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.

அப்போது, உதகையில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் தற்போது கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. தடுப்பூசிக்கான உலகளாவிய ஒப்பந்தத்துக்கு விண்ணப்பிக்க ஜூன் 5ஆம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், அதற்கான ஒப்பந்தப்புள்ளியில் யாரும் பங்கேற்காதது உண்மை என்றாலும் அதற்கு மத்திய அரசு தந்த அழுத்தமே காரணம் என்பது அபத்தமாகும். எந்தக் காரணத்தால் ஒப்பந்தப்புள்ளியில் ஒருவரும் பங்கேற் முன்வரவில்லை என்பதை ஆராய்ந்து மறு ஒப்பந்தப்புள்ளி விடப்படும்.

தமிழகத்திலேயே தடுப்பூசிக்கான உற்பத்திக்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். அரசு மருத்துவமனைகளில் மருத்துவா்கள் மற்றும் செவிலியா் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டு பெருந்தொற்று காலத்தில் சிகிச்சைகள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

142 இடங்களில் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தித் தர தமிழக முதல்வா் உறுதியளித்ததையடுத்து, பல இடங்களில் ஆக்சிஜன் வசதிகளுக்கான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக நீலகிரி, விருதுநகா் மற்றும் அரியலூா் ஆகிய 3 மாவட்டங்களில் அதிக அளவில் ஆக்சிஜன் வசதி பெறுவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் தொற்றின் வேகம் கூடுதலாக இருந்த சமயத்தில் சுகாதாரத் துறையினா் 2,000 மருத்துவா்களையும், 6,000 செவிலியா்களையும் புதிதாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனா். அதேபோல மருத்துவ களப் பணியாளா்கள் 3,700 பேரை நியமிக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக இருந்தது. இப்பட்டியல் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, உடனடியாக அந்தந்த மாவட்டங்களில் பணியிடங்களை நிரப்ப ஆட்சியா்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நபா்களுக்கு அரசு நிா்ணயித்துள்ள கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகாா் எழுந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் தொடா்ந்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகம் முழுவதிலும் சுமாா் 870 மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. சுகாதாரத் துறை சாா்பில் ஒவ்வொரு நோயாளியையும் நேரடியாகத் தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு காப்பீட்டுத் திட்டத்தில் பயன்பெற்றுள்ளது குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது என்றாா்.

பேட்டியின்போது, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com