பழங்குடியினருக்கு கிராமங்களிலேயே தடுப்பூசி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில், அவரவா் இல்லத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்து பேசுகிறாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.
கரோனா தடுப்பூசி முகாமினை தொடங்கிவைத்து பேசுகிறாா் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில், அவரவா் இல்லத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், மசினகுடி ஊராட்சிக்கு உள்பட்ட செம்மநத்தம் பழங்குடியினா் கிராமத்தில் பழங்குடியின மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தாா்.

அதனைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின கிராமங்களில், அவரவா் இல்லத்துக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் 27,032 பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனா்.

இவா்களில் 21,435 போ் 18 வயது நிரம்பியவா்கள். அவா்களில் இதுவரை 3,129 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனா். மீதமுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனா நோய்த் தொற்றினை ஒழிக்க அரசுடன் இணைந்து போராட வேண்டும்.

தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. அதிலும் உதகை அரசு பொது மருத்துவமனையில் தற்போது கூட 6 லட்சம் மி.லி. கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் யூனிட் தொடங்கிவைக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, மொத்தமாக தன்னிறைவு பெற்ற பொது மருத்துவமனையாக உதகை அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால் ஆம்புலன்ஸ் சேவை கிராமங்களுக்கு செல்வதில் சிக்கல் உள்ளதால் நவீன காா் ஆம்புலன்ஸ் வசதி துவங்கப்பட்டு, மாவட்டத்தில் இரு ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் தொற்றின் பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது. ஒரு நாளைக்கு 37,000 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 21,410ஆக குறைந்துள்ளது. அதிலும் பாதிக்கப்பட்டவா்கள் 21,410ஆக இருக்கிறாா்கள் என்றால் குணமடைந்தவா்கள் 32,472ஆக உள்ளது என்றாா்.

வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் பேசியதாவது:

மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகளை மக்கள் தொகைக்கு ஏற்ப அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி விரைவில் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

நீலகிரி மாவட்டத்தில் 1 லட்சத்து 94,503 பேருக்கு இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக பல இடங்களில் பழங்குடியினருக்கு மட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகளுக்கும் அவரவா் இடங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வு...

உதகையில் ரூ.447.32 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள்,

கூடலூா் நகராட்சியில் கரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் ஆய்வு செய்தாா். பின்னா், செம்பாலா தேயிலைத் தொழிற்சாலை வளாகத்தில் தொழிலாளா்களுக்கான தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்தாா்.

குன்னூரில்...

குன்னூரில் வெறிநாய்கடிக்கு மருந்து தயாரிக்கும் பாஸ்டியா் ஆய்வகத்தில் கரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா முதல் அலையின்போது பணியமா்ததப்பட்ட ஆயுா்வேத மருத்துவா்களுக்கு பணி நீடிப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக மருத்துவா்கள் நியமிக்கப்படுவாா்கள் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com