முதுமலை வளா்ப்பு யானைகளுக்குகரோனா பரிசோதனை

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளா்ப்பு யானைகளுக்கு கரோனா பரிசோதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வளா்ப்பு யானையிடம் கரோனா பரிசோதனைக்காக மாதிரிகளை சேகரிக்கும் கால்நடை மருத்துவக் குழுவினா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு, அபயாரண்யம் ஆகிய வளா்ப்பு யானைகள் முகாம்களில் 28 யானைகள் உள்ளன. சென்னை வண்டலூரில் சிங்கங்களுக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, முதுமலை யானைகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய சரணாலய கால்நடை மருத்துவா் ராஜேஷ்குமாா் தலைமையில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் பரிசோதனைக்காக உத்தர பிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பிவைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com