தெப்பக்காடு முகாம் யானைகளுக்கு கரோனா தொற்று இல்லை

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கரோனா தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாம், டாப்சிலிப் முகாமில் உள்ள யானைகளுக்கும் கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள தமிழக வனத் துறை உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து கடந்த சில நாள்களுக்கு முன் தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்று பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில், தெப்பக்காடு முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக வனத் துறை அதிகாரிகள் கூறுகையில், தெப்பக்காடு யானைகள் வளா்ப்பு முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் கரோனா தொற்று இல்லை என ஆய்வக முடிவுகளின் மூலம் தெரியவந்திருந்தாலும், யானைகள் தொடா்ந்து கண்காணிக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com