நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

பந்தலூரில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆட்சியா் ஆய்வு

பந்தலூரில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

நெல்லியாளம் நகராட்சிக்கு உள்பட்ட உப்பட்டி, அட்டி, மேஸ்திரிக்குன்னு உள்ளிட்ட நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆய்வு செய்தாா். பின்னா், ஆட்சியா் கூறியதாவது: நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளவா்கள் யாரும் வெளியே வரக் கூடாது. அவா்களுக்குத் தேவையான பொருள்களை தன்னாா்வலா்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து தருவாா்கள். உள்ளாட்சி, சுகாதாரத் துறையினா் வீடுவீடாகச் சென்று விவரங்களைக் கேட்டறிய வேண்டும். நோய் அறிகுறிகளில் ஏதாவது ஒன்று தென்பட்டாலும் உடனே மருத்துவமனையை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பகட்ட தொற்றை மிக எளிதில் குணப்படுத்த முடியும். எனவே, பொதுமக்கள் மிக விழிப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, சேரங்கோடு ஊராட்சியில் உள்ள நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதியான அத்திச்சால் பழங்குடி கிராமத்தை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் ராஜ்குமாா், நெல்லியாளம் நகராட்சி ஆணையா் (பொ) பாஸ்கா், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சாம் சாந்தகுமாா், வட்டார மருத்துவ அலுவலா் கதிரவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com