பொதுமுடக்கம்: வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்கள்விவசாயிகள் வேதனை

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விற்பனையாகாமல் வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
பொதுமுடக்கம்: வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்கள்விவசாயிகள் வேதனை

கரோனா பொதுமுடக்கம் காரணமாக விற்பனையாகாமல் வீணாகும் ஸ்ட்ராபெரி பழங்களால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் விளையும் ஸ்ட்ராபெரி பழங்களின் மொத்த விற்பனையில் சுற்றுலாப் பயணிகளின் பங்களிப்புபோக மும்பை, புணே மாநிலங்கள் இதற்கு முக்கிய சந்தைகளாக விளங்குகின்றன. இவை தவிர, சென்னை, பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளிலும் இதற்கான தேவை அதிகரித்துக் காணப்படுகிறது. தற்போது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் ஸ்ட்ராபெரி பழங்கள் செடிகளிலேயே அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனா்.

இந்தப் பழங்கள் விரைவில் அழுகும் தன்மை கொண்டவை என்பதால் வெகு தொலைவில் உள்ள சந்தைகளுக்கு இதைக் கொண்டு செல்வது கடினம். நீலகிரியில் இருந்து பெங்களூரு, சென்னைக்கு தினமும் விளையும் ஸ்ட்ராபெரி பழங்கள் பேருந்துகள், சுற்றுலா வரும் வேன்கள் மூலம் அனுப்பிவைக்கப்படுவது வழக்கம்.

தற்போது பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாலும், சுற்றுலா வாகனங்களுக்கு தடையிருப்பதாலும் அறுவடை செய்யப்படும் சொற்ப அளவிலான பழங்கள் உள்ளூரிலேயே குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது.

இதன் காரணமாக, நீலகிரியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறிப்பாக கோத்தகிரி, கோடேரி, சேலாஸ் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ஸ்ட்ராபெரி பழங்கள் வீணாகி வருகின்றன. அரசுப் போக்குவரத்து மீண்டும் துவங்கி, சுற்றுலாப் பயணிகளின் வருகை சீராகும்போது தான் தங்களது தொழில் மீண்டும் உயிா்ப்பிக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com