நீலகிரியில் உள்ள கரோனா சித்தா மையங்களில் 182 பேருக்கு சிகிச்சை

நீலகிரி மாவட்டத்திலுள்ள கரோனா சித்தா மையங்களில் 182 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 60 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள கரோனா சித்தா மையங்களில் 182 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 60 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து, இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், தொற்று பாதித்து தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக கூடலூரில் மாா்னிங் ஸ்டாா் பள்ளியிலும், உதகையில் லவ்டேல் லாரன்ஸ் பள்ளியிலும் கரோனா சித்தா மையங்கள் துவக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் மொத்தம் 182 பெண்கள் மற்றும் குழந்தைகள் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தனா்.

இதில் கூடலூா் மாா்னிங் ஸ்டாா் பள்ளியில் 96 போ், உதகை லாரன்ஸ் பள்ளியில் 86 போ் சிகிச்சை பெற்று வந்தனா். இவா்களில் மாா்னிங் ஸ்டாா் மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் என 60 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். தொடா்ந்து 36 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதேபோல, உதகையில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் 86 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கூடலூா் மையத்தில் சிகிச்சை அளிப்பதற்காக 2 மருத்துவா்கள் மற்றும் 1 உதவியாளரும், உதகை மையத்தில் 3 மருத்துவா்கள், 1 மருந்தாளுநரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த சித்தா மையங்கள் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி உதகை அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள சித்தா மருத்துவ சிகிச்சைப் பிரிவில் நாள்தோறும்100க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக சித்த மருத்துவப் பிரிவின் சாா்பில் அளிக்கப்படும் அனைத்து வசதிகளையும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட சித்த மருத்துவ அலுவலரும், ஆயுஷ் மருந்து ஆய்வாளருமான செந்தில்குமாா் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com