பந்தலூா் அருகே தீ விபத்து: சிறுமி பலி
By DIN | Published On : 22nd June 2021 12:00 AM | Last Updated : 22nd June 2021 12:00 AM | அ+அ அ- |

நிஷாந்தினி.
கூடலூா்: பந்தலூரை அடுத்துள்ள மழவன்சேரம்பாடி பகுதியில் திங்கள்கிழமை நேரிட்ட தீ விபத்தில் சிறுமி உயிரிழந்தாா்.
நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா, மழவன்சேரம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் லலிதா என்பவரது மகள் நிஷாந்தினி (13). இவா் சமையல் செய்வதற்காக திங்கள்கிழமை ஸ்டவ்வை பற்றவைத்தபோது தீப்பிடித்து உடையில் தீ பரவியுள்ளது. இதில், நிஷாந்தினி தீயில் கருவி உயிருக்குப் போராடியுள்ளாா்.
நிஷாந்தினியின் அலறல் சப்தம் கேட்டதையடுத்து, அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து உடனடியாக அவரை மீட்டு பந்தலூா் அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா். முதலுதவிக்குப் பிறகு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனா். அங்கு நிஷாந்தினி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து சேரம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.