முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி
நீலகிரியில் மொத்தம் ரூ.44.57 லட்சம் பறிமுதல்
By DIN | Published On : 04th March 2021 01:15 AM | Last Updated : 04th March 2021 01:15 AM | அ+அ அ- |

உதகை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை ரூ.44 லட்சத்து 57,400 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கண்காணிப்புக் குழுவினா் நடத்திய சோதனைகளில் நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வரை 20 வழக்குகள் பதியப்பட்டு ரூ.34 லட்சத்து 6,800 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாகவும், புதன்கிழமை மேலும் 9 வழக்குகள் பதியப்பட்டு ரூ.10 லட்சத்து 50,600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றுடன் சோ்த்து மாவட்டத்தில் புதன்கிழமை இரவு வரை 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.44 லட்சத்து 57,400 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.