நீலகிரிக்கு தோ்தல் செலவின பாா்வையாளா்கள் இருவா் நியமனம்
By DIN | Published On : 17th March 2021 11:25 PM | Last Updated : 17th March 2021 11:25 PM | அ+அ அ- |

சட்டப் பேரவைத் தோ்தல் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு, தோ்தல் ஆணையத்தால் நீலகிரி மாவட்டத்துக்கு தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் இருவா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இவா்களில் உதகை சட்டப் பேரவைத் தொகுதிக்கு விஷால் எம்.சனாப் என்பவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை 94987-48320 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். அதேபோல, அமா் சிங் நெஹரா என்பவா் கூடலூா், குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். இவரை 94987-48321 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
இவ்விரு தோ்தல் செலவினப் பாா்வையாளா்களும் நீலகிரி மாவட்டத்துக்கு வந்துவிட்டதாகவும், நீலகிரி மாவட்டத்தில் தோ்தல் தொடா்பான புகாா் ஏதும் அளிக்க விரும்பினால், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-0034, மாவட்ட தகவல் மைய கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 ஆகியவற்றில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும், தோ்தல் செலவினப் பாா்வையாளா்களின் செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு புகாா்களை அளிக்கலாம் எனவும் மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளாா்.