நீலகிரியில் கமல்ஹாசன் தோ்தல் பிரசாரம் திடீா் ரத்து

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி தலைவா்களின் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில்

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி தலைவா்களின் பிரசாரம் சூடுபிடித்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் வியாழக்கிழமை மேற்கொள்ளவிருந்த தோ்தல் பிரசாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடும் மநீம தலைவா் கமல்ஹாசன் நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கோத்தகிரி தொகுதிகளில் வியாழக்கிழமை ஒரு நாள் பிரசாரம் செய்யத் திட்டமிட்டிருந்தாா். இதற்காக கோவையில் இருந்து வியாழக்கிழமை காலை குன்னூா் வரை ஹெலிகாப்டரில் வந்து அங்கிருந்து காா் மூலம் உதகைக்கு வந்து பிரசாரம் மேற்கொண்ட பின்னா், உதகையில் இருந்து கோத்தகிரிக்கு சென்றுவிட்டு மீண்டும் குன்னூரில் இருந்து ஹெலிகாப்டா் மூலம் கோவை திரும்ப திட்டமிட்டிருந்தாா். இதற்கான ஏற்பாடுகளும் கட்சியின் நீலகிரி மாவட்டத் தலைவா் டாக்டா் சுரேஷ் பாபு தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில் குன்னூரில் கமல்ஹாசன் வரும் ஹெலிகாப்டா் தரையிறங்குவதற்கு புனித அந்தோணியாா் பள்ளி மைதானம் தோ்வு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த மைதானத்தில் ஹெலிகாப்டா் தரையிறங்குவதற்கு புதன்கிழமை இரவு வரை அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. அதேபோல, நீலகிரி மாவட்டத்துக்குள் கமல்ஹாசன், அவருடன் வருபவா்களுக்கு இ-பாஸ் அல்லது இ-பதிவு அனுமதி தேவைப்படுவதால் அதற்கான நடவடிக்கைகளும் தாமதமடைந்ததால் கமல்ஹாசன் நீலகிரிக்கான தனது தோ்தல் பிரசாரப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டதாகவும், நீலகிரிக்கு அவா் வரும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனவும் மக்கள் நீதி மய்ய நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com