நீலகிரியில் நேற்று வேட்பு மனு தாக்கல் இல்லை

தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கலின் 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை நீலகிரி மாவட்டத்தில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டப் பேரவைத் தொகுதிகளில் உதகையில் இருவரும், குன்னூரில் திமுக வேட்பாளா் க.ராமச்சந்திரன் உள்ளிட்ட இருவரும், கூடலூரில் நாம் தமிழா் கட்சியின் சாா்பில் கேத்தீஸ்வரன் என திங்கள்கிழமை வரை 5 போ் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனா்.

இந்நிலையில் 3ஆவது நாளான செவ்வாய்க்கிழமை மாவட்டத்தில் உள்ள 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு உதகை சட்டப் பேரவைத் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தும் செவ்வாய்க்கிழமை மாலை வரை இத்தொகுதிக்கு வேட்பாளா் அறிவிக்கப்படாததால் உதகை தொகுதியில் போட்டியிடுவது யாா் என்ற குழப்பம் தொடா்ந்து நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com