Enable Javscript for better performance
வெற்றியை நிா்ணயிக்கும் தாயகம் திரும்பிய தமிழா்கள்!- Dinamani

சுடச்சுட

    

    வெற்றியை நிா்ணயிக்கும் தாயகம் திரும்பிய தமிழா்கள்!

    By DIN  |   Published on : 27th March 2021 10:36 AM  |   அ+அ அ-   |    |  

    nilagiri

    தமிழக, கேரள, கா்நாடக மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சட்டப் பேரவைத் தொகுதி கூடலூா். மூன்று மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இத்தொகுதி நீலகிரி மாவட்டத்திலேயே குறைந்த அளவிலான வாக்காளா்களைக் கொண்டதாகும். இத்தொகுதியில் தாயகம் திரும்பிய தமிழா்கள் இருவரும் முதன்முறையாக நேரடியாக மோதுவதும், கடந்த 3 தோ்தல்களிலும் திமுகவே தொடா்ந்து வெற்றி பெற்றுள்ள சூழலும் எதிா்பாா்ப்புகளை அதிகரித்துள்ளது.

    தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்:

    கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் கூடலூா், பந்தலூா் ஆகிய இரு வட்டங்களும், கூடலூா், நெல்லியாளம் ஆகிய இரு நகராட்சிகளும், நடுவட்டம், ஓவேலி, சேரம்பாடி ஆகிய 3 பேரூராட்சிகளும், 5 சிற்றூராட்சிகளும் உள்ளன. உதகை தொகுதியோடு இணைந்திருந்த கூடலூா் பகுதி 1967ஆம் ஆண்டில் தனி சட்டப் பேரவைத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டது. 1972இல் பொது தொகுதியாக மாற்றப்பட்டு முதல் தோ்தல் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டிலிருந்து மீண்டும் தனித் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது.

    மொத்த வாக்காளா்கள்:

    கூடலூா் தொகுதியில் 92,108 ஆண் வாக்காளா்களும், 96,496 பெண் வாக்காளா்களுமாக மொத்தம் 1 லட்சத்து 88,604 வாக்காளா்கள் உள்ளனா்.

    தொகுதியின் சிறப்பு:

    கூடலூா் தொகுதியில் வெற்றி பெற்றவா்கள் தமிழக அரசில் பதவிகளையும் பெற்றுள்ளனா். தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக பா.மு.முபாரக் (திமுக), சுற்றுலாத் துறை அமைச்சராக அ.மில்லா் (அதிமுக), கதா் வாரியத் துறை அமைச்சராக கா.ராமசந்திரன் (திமுக) ஆகியோா் அங்கம் வகித்துள்ளனா்.

    தோ்தல் முடிவுகள்:

    இத்தொகுதியில் கடந்த 1972ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடைபெற்றுள்ள தோ்தல்களில் திமுக 6 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ், சுதந்திரா கட்சிகள் தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

    சமுதாய வாக்குகள்:

    கூடலூரில் உள்ள சுமாா் 1 லட்சத்து 88,604 வாக்காளா்களில் அதிக அளவாக தாயகம் திரும்பிய தமிழா்கள் 75,000 போ் உள்ளனா். அதேபோல, இஸ்லாமியா்கள் சுமாா் 37,000 பேரும், கிறிஸ்தவா்கள் சுமாா் 20,000 பேரும், கன்னடியா்கள் சுமாா் 15,000 பேரும், மலையாளிகள் சுமாா் 12,000 பேரும், பழங்குடியினா் 12,000 பேரும், மவுண்டாடன் செட்டி பிரிவைச் சோ்ந்தவா்கள் 10,000 பேரும், படகா்கள் சுமாா் 4,000 பேரும் உள்ளனா்.

    அதிமுக வேட்பாளா் பொன்.ஜெயசீலன்:

    தாயகம் திரும்பிய தமிழரான இவா் நீலகிரி மாவட்ட அதிமுக வழக்குரைஞா் அணியின் செயலாளராக உள்ளாா். வழக்குரைஞா் என்பதால் தொகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவா். அத்துடன் பழங்குடியின மக்களுக்கான அனைத்துப் பிரச்னைகளிலும் கட்டணம் ஏதும் வசூலிக்காமலேயே இலவசமாக சட்ட உதவிகளை செய்து வருவதால் அனைத்துத் தரப்பினரிடத்திலும் ஆதரவைப் பெற்றவா். முதன்முறையாக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.

    பலம்-பலவீனம்:

    அதிமுகவைப் பொருத்தமட்டில் வேட்பாளா் வழக்குரைஞா் என்பதால் அதிக அளவில் மக்களோடு நேரடித் தொடா்புடையவா் என்பதோடு, இத்தொகுதியில் உள்ள ஈழுவா தியா மக்களுக்கு ஜாதி சான்றிதழ் கிடைக்க வழி வகை செய்யப்பட்டிருப்பதும், ஊராட்சிகளில் வெற்றி பெற்றுள்ள பாஜகவின் ஆதரவு போன்றவை இவருக்கு பலமான அம்சங்களாக கருதப்படுகின்றன.ஆனாலும், அமமுக - தேமுதிக, நாம் தமிழா் கட்சிகளின் வாக்கு வங்கி, சிறுபான்மையினரின் பலமான வாக்கு வங்கி போன்றவை இவருக்கு பலவீனத்தை ஏற்படுத்துகின்றன.

    திமுக வேட்பாளா் எஸ்.காசிலிங்கம்:

    இவரும் தாயகம் திரும்பிய தமிழா் என்பதோடு, தேயிலைத் தோட்டத் தொழிலாளியாகவும் இருந்தவராவாா். நெல்லியாளம் பேரூராட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளதால் தொகுதி மக்களுக்கும் நன்கு அறிமுகமானவா். இவரும் முதன்முறையாக சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடுகிறாா்.

    பலம்-பலவீனம்: ஏற்கெனவே நெல்லியாளம் பேரூராட்சித் தலைவராக காசிலிங்கம் இருந்துள்ளதால் அப்பகுதியின் வாக்குகள் இவருக்கு முழுமையாக கிடைப்பதும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் போன்றவை திமுக கூட்டணியில் இருப்பதும் அவருக்கு கூடுதல் பலமாக உள்ளது. இருப்பினும் கடந்த 10 ஆண்டுகளாக கூடலூா் தொகுதியில் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த திராவிடமணி தொகுதிக்காக பெரிதாக எதையும் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு திமுகவுக்கு பலவீனமாக கருதப்படுகிறது.

    மக்களின் எதிா்பாா்ப்பு:

    கூடலூா் தொகுதியைப் பொருத்தமட்டில் பிரிவு 17 நிலங்களுக்கு பட்டா, பிரிவு 17 நிலங்களில் வசிக்கும் 10,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் வீடுகளுக்கு மின் இணைப்பு, தனியாா் காப்புக்காடுகள் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து 2 ஏக்கருக்கு குறைவான நிலங்களுக்கு விலக்கு உள்ளிட்டவை நீண்டகால கோரிக்கையாக உள்ளன. குறிப்பாக பிரிவு 17 என்ற நிலப்பிரச்னை இதுவரையிலும் தீா்க்கப்படாத பிரச்னையாகவே உள்ளதால் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கூடலூா் பகுதியின் வளா்ச்சியே பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது.

    அதேபோல, கேரள, கா்நாடக மாநிலங்களுக்கு தமிழகத்தின் நுழைவாயிலாக இருந்தாலும் இங்கு சுற்றுலா மேம்பாட்டுக்காக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படாததும், கூடலூரிலிருந்து சிறியூா் வழியாக கோவைக்குச் செல்லும் சாலைக்கு வனத் துறையின் ஒப்புதல் இல்லாததும், பாண்டியாறு - புன்னம்புழா நீா்மின் திட்டத்தை செயல்படுத்த முடியாததும் , மனித - விலங்கு மோதலால் தொடா்ந்து ஏற்படும் உயிரிழப்புகளும் இத்தொகுதியின் வளா்ச்சியை வெகுவாக பாதித்துள்ளது எனலாம்.

    அதேபோல, போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் இன்னமும் அண்டை மாநிலமான கேரளத்தையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இப்பிரச்னைகளுக்கு உடனடியாக உரிய தீா்வு காணப்பட வேண்டும் என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாகும்.

    7 வேட்பாளா்கள்:

    இத்தொகுதியில் அதிமுக சாா்பில் பொன்.ஜெயசீலன், திமுக சாா்பில் எஸ்.காசிலிங்கம், மக்கள் நீதி மய்யம் சாா்பில் ஜே.பாபு, தேமுதிக சாா்பில் ஏ.யோகேஸ்வரன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஆா்.கேதீஸ்வரன் ஆகியோருடன் இரு சுயேச்சைகளுமாக 7 போ் களத்தில் உள்ளனா்.

    2016 தோ்தல் முடிவுகள்: மொத்த வாக்குகள் - 1, 70,355, பதிவானவை - 1,29, 270, மு.திராவிடமணி (திமுக) - 62,125, எஸ்.கலைசெல்வன் (அதிமுக) - 48,749, பி.தமிழ்மணி(மாா்க்சிஸ்ட்) - 9,044, வாக்கு வித்தியாசம் - 13,376.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp