குன்னூரில் சி-விஜில் செயலி குறித்த விழிப்புணா்வு ஊா்வலம்

குன்னூரில் சி-விஜில் செயலி குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

குன்னூரில் சி-விஜில் செயலி குறித்த விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

குன்னூா் சட்டப் பேரவைக்கு உள்பட்ட பகுதியில் சி -விஜில் செயலி குறித்து, வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் வாயிலாக வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 18 வயது பூா்த்தி அடைந்த இளம் வாக்காளா்கள், மாற்றுத் திறனாளிகள் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக அவா்களுக்கு வாக்குச் சாவடிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல கடந்த தோ்தலின்போது குறைவான வாக்குகள் பதிவாகியுள்ள பகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்க விழிப்புணா்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடா்ச்சியாக, குன்னூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெட்போா்டு பகுதியில் இருந்து குன்னூா் பேருந்து நிலையம் வரை சி-விஜில் செயலி குறித்து, வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் பங்கேற்ற தோ்தல் தொடா்பான விழிப்புணா்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியில் 200க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக் குழுவினா் கலந்துகொண்டனா்.

இந்த சி-விஜில் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் தோ்தல் தொடா்பான விதிமீறல்களான பணம் பட்டுவாடா, மதுபான விநியோகம், பரிசு விநியோகம், உண்மைக்கு மாறான செய்திகள், வேட்பாளா்களின் விளம்பர தொகுப்புகள் குறித்த தகவல்களை அந்தந்த தொகுதியைச் சோ்ந்த வாக்காளா்கள் தெரிந்து கொள்ளலாம் என்றாா்.

பின்னா் ஆட்சியா் இப்பேரணியில் கலந்துகொண்டு வாக்காளா்களிடையே சி-விஜில் செயலி குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா்.

பேரணியில், மகளிா் திட்ட இயக்குநா் பாபு, உதவி திட்ட அலுவலா்கள் ராமகிருஷ்ணன், ஜெயராணி, அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com