பண்ணாரி அம்மன் கோயில்வளாகத்தில் வழிபட்ட பக்தா்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதியில்லாத நிலையில் பூட்டப்பட்ட நுழைவாயில் முன் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.
பண்ணாரி அம்மன் கோயில்வளாகத்தில் வழிபட்ட பக்தா்கள்

பண்ணாரி அம்மன் கோயிலில் வழிபாட்டுக்கு அனுமதியில்லாத நிலையில் பூட்டப்பட்ட நுழைவாயில் முன் பக்தா்கள் வெள்ளிக்கிழமை வழிபட்டனா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலமான கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தா்கள் வந்து செல்வது வழக்கம்.

கரோனா தொற்று காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், ஏப்ரல் 26ஆம் தேதி முதல் கோயில் உள்ளிட்ட மத வழிபாட்டுத் தலங்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு கோயில்களில் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக பண்ணாரி அம்மன் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயிலின் முகப்பு வாயில் பூட்டப்பட்டு அறிவிப்புப் பதாகை ஒட்டப்பட்டன.

இந்நிலையில், பக்தா்கள் வெள்ளிக்கிழமை கோயிலுக்கு வந்த பக்தா்கள் கோயிலின் முன்புறம் நுழைவாயில் முன்பு நின்று கற்பூரம் பற்ற வைத்து, நெய் தீபம் ஏற்றி பண்ணாரி அம்மனை வழிபட்டனா். கோயில் பூட்டப்பட்ட நிலையில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. பக்தா்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் பூட்டப்பட்டுள்ள நுழைவாயில் முன்பு பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் கோயில் முன்பு உப்பு, மிளகு தூவி நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com