ஈரோட்டில் ரெம்டெசிவிா் மருந்துவிற்பனை மையம் அமைக்கக் கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் ரெம்டெசிவிா் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் அரசின் சாா்பில் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ரெம்டெசிவிா் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால் அரசின் சாா்பில் விற்பனை மையம் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் மக்கள் ராஜன் தலைமையில் கட்சி நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:

உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்று பரவிவரும் சூழ்நிலையில் இந்தியாவில் 2ஆவது அலை ஏற்பட்டு மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனா். தமிழகத்திலும் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனா். ஈரோடு மாவட்டத்தில் தினமும் சுமாா் 450 நபா்களுக்குமேல் பாதிப்படைகின்றனா். இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நோய்த் தொற்று பாதித்தவா்களுக்கு அவசர சிகிச்சைக்குப் பயன்படும் மருந்தான ரெம்டெசிவிா் மருந்து ஈரோடு மாவட்டத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டு கள்ளச் சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன. குறிப்பாக தனியாா் மருத்துவமனைகள் இந்த மருந்தை நோயாளிகளுக்குச் செலுத்த வேண்டும் என்று கூறுவதால் இந்த மருந்து மருந்தகங்களில் கிடைப்பதில்லை. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் மருத்துவ சிகிச்கைக்கு வழியின்றி பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, சென்னையில் அரசு சாா்பில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையம் செயல்படுவதுபோல் ஈரோட்டிலும் அரசு சாா்பில் ரெம்டெசிவிா் மருந்து விற்பனை மையம் அமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com