மருத்துவா் பரிந்துரை இன்றி மருந்து கொடுத்த கடைக்கு ‘சீல்’

குன்னூா் அருகே உபதலை பகுதியில் கருக்கலைப்பு  மருந்தை மருத்துவா் பரிந்துரையின்றி வாடிக்கையாளருக்கு  கொடுத்த மருந்துக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

குன்னூா் அருகே உபதலை பகுதியில் கருக்கலைப்பு  மருந்தை மருத்துவா் பரிந்துரையின்றி வாடிக்கையாளருக்கு  கொடுத்த மருந்துக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள  உபதலை கிராமத்தில்  உள்ள தனியாா் மருந்துக் கடையில் கடந்த சில நாள்களுக்கு முன் கருக்கலைப்பு மருந்தை வாங்கி உட்கொண்ட 23 வயது பெண்ணுக்கு   குழந்தை பிறந்துள்ளது. ஆபத்தான  நிலையில்  இருந்த அவரைக் காப்பாற்றிய  உதகை அரசு மருத்துவா்கள் இச்சம்பவம் குறித்து மாவட்ட நிா்வாகத்தின்  கவனத்துக்கு கொண்டு சென்றனா். 

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட மருத்துவ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட  மருந்துக் கடையைக் கண்டறிந்தனா்.   கடை உரிமையாளரிடம்  மேற்கொண்ட விசாரணையில் , கருக்கலைப்பு  மருந்தை மருத்துவா் பரிந்துரையின்றி வாடிக்கையாளருக்கு  கொடுத்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து  சம்பந்தப்பட்ட   மருந்துக் கடைக்கு சுகாதார அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com