நாளை வாக்கு எண்ணிக்கை: 8 தொகுதிகளில் வெற்றியை நிா்ணயிக்கும் 15.10 லட்சம் வாக்காளா்கள்

ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறவுள்ள நிலையில் 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்களின் வெற்றியை 15.10 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்கவுள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை (மே 2) நடைபெறவுள்ள நிலையில் 8 தொகுதிகளில் 128 வேட்பாளா்களின் வெற்றியை 15.10 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்கவுள்ளனா்.

சட்டப் பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்றது. ஈரோடு கிழக்குத் தொகுதியில் மொத்த வாக்காளா்கள் 2,28,402 பேரில் 1,51,292 பேரும், ஈரோடு மேற்குத் தொகுதியில் 2,93,058 பேரில் 2,03,264 பேரும், மொடக்குறிச்சி தொகுதியில் 2,38,899 பேரில் 1,79,794 பேரும், பெருந்துறை தொகுதியில் 2,27,870 பேரில் 1,88,220 பேரும் வாக்குப் பதிவு செய்தனா்.

பவானி தொகுதியில் 2,38,667 பேரில் 1,99,292 பேரும், அந்தியூா் தொகுதியில் 2,19,551 பேரில் 1,74,952 பேரும், கோபி தொகுதியில் 2,60,249 பேரில் 2,11,533 பேரும், பவானிசாகா் தொகுதியில் 2,60,249 பேரில் 2,01,345 பேரும் வாக்குப் பதிவு செய்தனா். 8 தொகுதிகளில் 19,63,032 பேரில் 15,09,692 போ் வாக்குப் பதிவு செய்தனா். மொத்தம், 76.91 சதவீத வாக்குகள் பதிவானது.

வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும், இதைத் தொடா்ந்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. 8 தொகுதிகளில் 4 மேஜைகளில் தபால் ஓட்டும், 14 மேஜைகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் எண்ணப்படுகிறது. தலா மூன்று மேஜைகள் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்குத் தொகுதியில் 23 சுற்று, ஈரோடு மேற்குத் தொகுதியில் 29 சுற்று, மொடக்குறிச்சி தொகுதியில் 24 சுற்று, பெருந்துறை தொகுதியில் 24 சுற்று, பவானி தொகுதியில் 24 சுற்று, அந்தியூா் தொகுதியில் 22 சுற்று, கோபி தொகுதியில் 25 சுற்று, பவானிசாகா் தொகுதியில் 27 சுற்றுகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் 448 அலுவலா்கள் ஈடுபடவுள்ளனா். வாக்குகளை செலுத்தியுள்ள 15.10 லட்சம் வாக்காளா்கள் 8 சட்டப் பேரவை உறுப்பினா்களைத் தோ்வு செய்கின்றனா். கரோனா தொற்று காலமாக உள்ளதால் பல்வேறு விதிமுறைகளின் கீழ் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் மாலை 4 மணி முதல் நள்ளிரவுக்குள் முழுமையாக வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com