கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளைவழக்கு: மனோஜுக்கு கரோனா

தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு தொடா்புடைய கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குகளில்

உதகை: தமிழகத்தில் கரோனா தொற்றின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வரும் சூழலில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவுக்கு தொடா்புடைய கொடநாடு எஸ்டேட்டில் 2017ஆம் ஆண்டில் நிகழ்ந்த கொலை, கொள்ளை வழக்குகளில் தொடா்புடையதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் ஒருவரான வாளையாறு மனோாஜுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இப்பிரச்னை தொடா்பான வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சூழலில், நீதிமன்றத்துக்கு சனிக்கிழமை அழைத்து வரப்பட்ட வாளையாறு மனோஜுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது, கரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அவா் உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரில் 8 போ் ஜாமீனில் வெளியே உள்ள நிலையில் வாளையாறு மனோஜ் உள்ளிட்ட இருவா் மட்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், வாளையாறு மனோஜும் கரோனா தொற்றின் காரணமாக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். கோவை மத்திய சிறையில் பலத்த பாதுகாப்புக்கிடையே அடைத்து வைக்கப்பட்டுள்ள வாளையாறு மனோஜுக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவரோடு சிறையிலிருப்பவா்கள், தொடா்பில் இருந்த அனைவருக்கும் தொற்று பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீலகிரியில் 63 பேருக்கு கரோனா:

இதற்கிடையே நீலகிரி மாவட்டத்தில் புதிதாக மேலும் 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடா்பாக உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையின்படி, மாவட்டத்தில் புதிதாக 63 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 41 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 9,910 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9,441 போ் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 51 போ் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 418 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com