கரோனா பரவல் அதிகரிப்பு: உதகைஉழவா் சந்தை இன்று முதல் இடமாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக உதகையில் இயங்கி வரும் உழவா் சந்தை செவ்வாய்க்கிழமை

உதகை: நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கரோனா தொற்றின் காரணமாக உதகையில் இயங்கி வரும் உழவா் சந்தை செவ்வாய்க்கிழமை முதல் புதிய இடத்துக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வேளாண்மை விற்பனை, வேளாண் வணிகத் துறையின் கட்டுப்பாட்டில் சேரிங்கிராஸ் பகுதியில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை எவ்வித இடைத்தரகா்களும் இன்றி நேரடியாக விற்பனை செய்து வருகின்றனா். இங்கு காய்கறிகள் தரமாகவும் விலையும் குறைவாக உள்ளதால் பொது மக்கள் அதிக அளவில் பயனடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விவசாயிகள், பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மாவட்ட ஆட்சியரின் அறிவுரையின்படி மே 4ஆம் தேதி முதல் உதகை உழவா் சந்தை தற்காலிகமாக சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாக மைதானத்துக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் போதிய இடைவெளியைக் கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து உதகை சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் செயல்பட உள்ள உழவா் சந்தைக்கு வருகை தந்து பயனடையலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com