கரோனா மையமாக மாறிய கூடலூா் அரசு கலைக் கல்லூரி

கரோனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட கூடலூா் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி.
கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்ட கூடலூா் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரி.

கரோனால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரி கரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் கரோனா நோய்த்தொற்று தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா வாா்டு நோயாளிகளால் ஏற்கெனவே நிரப்பிவிட்ட நிலையில் நோயாளிகளைத் தங்க வைக்க இடம் இல்லை. இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உதகை மற்றும் கோவைக்கு அழைத்துச் செல்லும் செல்லும் நிலை ஏற்பட்டது.

இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். பின்பு கூடலூா் கோழிப்பாலம் பகுதியில் உள்ள அரசு கலைக் கல்லூரி, தொரப்பள்ளியில் உள்ள பழங்குடியினா் பள்ளி, ஹெல்த்கேம்ப் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆகிய மூன்று இடங்களையும் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற உத்தரவிட்டாா்.

இதையடுத்து முதல் கட்டமாக அரசு கலை அறிவியல் கல்லூரியை கரோனா சிகிச்சை மையமாக மாற்றும் பணி தொடங்கப்பட்டு அங்கு கழிவறைகள், படுக்கை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் கோட்டாட்சியா் ராஜ்குமாா் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது. கோழிப்பாலம் கல்லூரி வளாகத்தில் இருந்த கல்லூரி அலுவலகத்தை ஆமைக்குளம் பகுதியில் உள்ள பழைய கல்லூரி வளாகத்துக்கு மாற்றும் பணியும் நடந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com