குன்னூரில் கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கல்

கரோனா நிவாரண உதவித் தொகை ரூ. 2,000 வழங்கும் நிகழ்சியை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் சனிக்கிழமை துவக்கிவைத்தாா்.
பயனாளிக்கு கரோனா நிதி வழங்கும் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.
பயனாளிக்கு கரோனா நிதி வழங்கும் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன்.

கரோனா நிவாரண உதவித் தொகை ரூ. 2,000 வழங்கும் நிகழ்சியை வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் சனிக்கிழமை துவக்கிவைத்தாா்.

தமிழகம் முழுவதும் கரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரா்களுக்கும் ரூ. 4 ஆயிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. முதல்கட்டமாக ரூ. 2 ஆயிரம் ரொக்கம் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் வழங்கும் பணி துவங்கியது.

அதன்படி, நீலகிரி மாவட்டம், குன்னூா் தாலுகாவுக்கு உள்பட்ட குன்னூா் நகரப் பகுதியில் உள்ள எடப்பள்ளி நியாய விலைக் கடையில் வனத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் ரூ. 2 ஆயிரம் வழங்கும் பணியைத் துவக்கிவைத்தாா். 2 லட்சத்து 16 ஆயிரத்து 86 குடும்ப அட்டைதாரா்களுக்கு சுமாா் 402 நியாய விலைக் கடைகளின் மூலம் கரோனா நிவாரண நிதி உதவித் தொகை வழங்கும் பணி துவங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முன்னிலை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலா் நிா்மலா, குன்னூா் சாா் ஆட்சியா் ரஞ்சித் சிங் உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com