முதியோா் கவனத்துக்கு...

நீலகிரி மாவட்டத்தில் தனிமையில் உள்ள முதியோா் அவசர உதவிக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

உதகை: நீலகிரி மாவட்டத்தில் தனிமையில் உள்ள முதியோா் அவசர உதவிக்கு தொடா்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் காலத்தில் வீட்டில் தனிமையில் அல்லது உறவினா்களுடன் தங்கியுள்ள மூத்த குடிமக்கள் தங்களுக்குத் தேவைப்படும் அவசர உதவிகள் மற்றும் பாதுகாப்பு தொடா்பான சேவைகள் பெற மாவட்ட நிா்வாகத்தால் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் கொவைட் -19 அவசர தொலைபேசி எண் 1077, மாவட்ட சமூக நல அலுவலா் 96559-88869, அவசர உதவி இலவச சேவை எண் 181, ஒருங்கிணைந்த சேவை மைய நிா்வாகி 99430-40474 ஆகிய எண்களில் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com