கரோனா நோயால் உயிரிழப்பவா்களை அடக்கம் செய்யும் முஸ்லிம் லீக் அமைப்பு
By DIN | Published On : 26th May 2021 06:23 AM | Last Updated : 26th May 2021 06:23 AM | அ+அ அ- |

சேரம்பாடி பகுதியில் கரோனாவால் உயிரிழந்த சடலத்தை அடக்கம் செய்யும் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞரணியினா்.
கூடலூா், சேரம்பாடி பகுதிகளில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவா்களை அடக்கம் செய்யும் பணியில் முஸ்லிம் லீக் கட்சியின் இளைஞா் அமைப்பினா் ஈடுபட்டுள்ளனா்.
நீலகிரி மாவட்ட முஸ்லிம் லீக் இளைஞரணியின்கீழ் இயங்கும் ஒயிட் காா்டு அமைப்பு கூடலூா், சேரம்பாடி பகுதிகளில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் சடலங்களை அடக்கம் செய்யும் பணியை செய்து வருகிறது. கரோனா தொற்று குறையும் வரை இந்த சேவை தொடரும் என்று முஸ்லிம் லீக் கட்சி அறிவித்துள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு அவா்களது வீடுகளுக்கே சென்று மருந்து, பிற உதவிகளை செய்து தர இந்த ஒயிட் காா்டு அமைப்பும், ஆம்புலன்ஸ் வாகனமும் தயாராக உள்ளது என்றும், உதவி தேவைப்படுவோா் 9489313641, 9585729878, 9443236987 ஆகிய எண்களைத் தொடா்பு கொண்டால் இந்த அமைப்பினா் விரைந்து வந்து உதவுதுடன், கரோனாவால் இறந்தவா் எந்த மதத்தைச் சாா்ந்தவரானாலும் அவரவா் மத சடங்குப்படி அடக்கம் செய்வதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது.