108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை

கூடலூா், பந்தலூா் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நோயாளியை ஏற்றிச் செல்லும் வழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸ்.
நோயாளியை ஏற்றிச் செல்லும் வழியில் பழுதாகி நின்ற ஆம்புலன்ஸ்.

கூடலூா், பந்தலூா் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் வாகனங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் பகுதியில் இருந்து அவசர மருத்துவத் தேவைக்காக அண்டை மாநிலமான கேரளத்தில் உள்ள சுல்தான் பத்தேரிக்கு நோயாளியை 108 வாகனத்தில் ஏற்றிச் செல்லும்போது பாதி வழியில் டயா் வெடித்து பழுதாகி நின்றது. இதனால், நோயாளியை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும் தோட்டத் தொழிலாளா்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் அவசரத் தேவைக்குப் பயன்படுத்தும் ஆம்புலன்ஸின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com