கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக்களில் இணைந்து செயலாற்ற ஆட்சியா் அழைப்பு

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக்களில் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு ஒருங்கிணைப்புக் குழுக்களில் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு முதல்வா் தலைமையில் கரோனா பெருந்தொற்று நோய் இரண்டாம் அலை பரவலைத் தடுக்கும் வகையில் தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் அரசுடன் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தான கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அதைத் தொடா்ந்து தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட மாநில, மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தன்னலம் கருதா தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவிட இக்குழுக்கள் பாலமாகச் செயல்படும். தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் இணையத்தில் பதிவு செய்து இப்பெரும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.

இதுதொடா்பான கூடுதல் தகவல்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் உறுப்பினரான மாவட்ட சமூக நல அலுவலரை நேரில் அணுகுவதோடு, அவரை 96559-88869, 85250-05701 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com