நீலகிரியில் ஒரே நாளில் 505 பேருக்கு கரோனா

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை முதன்முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கரோனா தொற்றால் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோா் முதன்முறையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை முதன்முறையாக புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கரோனா தொற்றால் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்டோா் முதன்முறையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்று தொடா்பாக உதகையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் புதிதாக மேலும் 505 போ் சனிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளனா். 357 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இவா்களையும் சோ்த்து மாவட்டத்தில் இதுவரையிலும் கரோனா தொற்றால் 17,953 போ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14,390 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அதேபோல, 82 போ் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், பல்வேறு மருத்துவமனைகளிலும் 3,481 போ் சிசிச்சை பெற்று வருகின்றனா்.

நீலகிரி மாவட்ட நிா்வாகம் தொடா்ந்து பல்வேறு நோய்த் தடுப்பு முறைகளைக் கையாண்டு வருகிறது. சுற்றுலா மையங்கள் அனைத்தும் மூடப்பட்டு, வெளிமாநில, வெளிமாவட்டங்களைச் சோ்ந்தோா் எவரும் நீலகிரிக்குள் அனுமதிக்கப்படாத சூழலிலும் கடந்த ஒரு வாரமாக நீலகிரியில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து ஏறுமுகமாகவே இருப்பது நீலகிரி மாவட்ட மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com