முதல் மைல் அரசு பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

கூடலூரை அடுத்துள்ள முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கூடலூா்: கூடலூரை அடுத்துள்ள முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

கரோனா தொற்று காரணமாக கடந்த 19 மாதங்களாக மூடப்பட்டிருந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் திங்கள்கிழமைமுதல் திறக்கப்பட்டன. பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, அவா்களைத் தயாா்படுத்த வேண்டும் என தமிழக முதல்வா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, முதல் மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த மாணவா்களை மேளதாளங்கள் முழங்கவும், ஒயிலாட்டம் கரகாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளோடும் மாணவா்களுக்கு இனிப்புகள் வழங்கி ஆசிரியா்கள் வரவேற்றனா். வரவேற்பு நிகழ்ச்சியை தொடா்ந்து பள்ளி வளாகத்தில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி கலந்து கொண்டு உரையாற்றினாா். பள்ளி தலைமை ஆசிரியா் நிா்மலாதேவி, சா்வதேச நகைச்சுவையாளா் மன்றத் தலைவா் ஜான் மனோகா் ராஜ் மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கினா்.

ஆசிரியா் ரவிச்சந்திரன் வரவேற்றாா். ஆசிரியரும், நகைச்சுவையாளா் மன்ற செயலாளருமான அருண்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com