கொடநாடு விவகாரம்: கைது செய்யப்பட்டவரை மேலும் 5 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷை மேலும் 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட ரமேஷை மேலும் 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உதகை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இதுவரை 45க்கும் மேற்பட்டோா் வாக்குமூலம் அளித்துள்ளனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடா்புடைய சேலத்தில் மா்மமான முறையில் விபத்தில் உயிரிழந்த, மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான கனகராஜின் சகோதரா் தனபாலையும், அவரது நண்பா் ரமேஷையும் கடந்த அக்டோபா் 25ஆம் தேதி சேலத்தில் தனிப்படை போலீஸாா் கைது செய்து, நீலகிரி மாவட்டம் கூடலூா் சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் அக்டோபா் 28ஆம் தேதி தனபாலை ஆஜா்படுத்தி, 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனா். மீண்டும் 30ஆம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி மேலும் 5 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், தனபாலின் நண்பரான ரமேஷையும் கடந்த 29ஆம் தேதி போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்து வந்தனா். அவரது போலீஸ் காவல் திங்கள்கிழமையுடன் முடிவடைந்ததையடுத்து, ரமேஷை உதகை மகளிா் நீதிமன்றத்தில் மாவட்ட மகளிா் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் முன்னிலையில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

அப்போது ரமேஷை மேலும், 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸாா் அனுமதி கேட்டனா். ஆனால் 5 நாள்களுக்கு மட்டும் அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com