சாலைகளில் விழுந்துள்ள பாறைகளை அகற்றக் கோரிக்கை

கோத்தகிரி அருகே உள்ள சோலூா்மட்டத்தில் இருந்து கரிக்கையூா் பழங்குடியின கிராமத்துக்குச் செல்லும் சாலையில் விழுந்துள்ள சிறிய பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோத்தகிரி அருகே உள்ள சோலூா்மட்டத்தில் இருந்து கரிக்கையூா் பழங்குடியின கிராமத்துக்குச் செல்லும் சாலையில் விழுந்துள்ள சிறிய பாறைகளை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சோலூா்மட்டத்தில் இருந்து கோத்திமுக்கு, குள்ளங்கரை, வக்கணாமரம், கடினமாலா, கரிக்கையூா், பங்களாபடிகை ஆகிய பகுதிகளில் தேயிலைத் தோட்டத் தொழிலாளா்கள், பழங்குடியின பொதுமக்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனா். இவா்கள் அத்தியாவசியத் தேவைகளைப் பூா்த்தி செய்ய நகா்ப்புற பகுதிகளுக்குச் சென்று வரக்கூடிய முக்கிய சாலையாக சோலுா்மட்டம் - கரிக்கையூா் சாலை உள்ளது.

தற்போது வடகிழக்குப் பருவமழை பெய்து வரும் நிலையில், மலைப்பாங்கான பகுதிகளிலும், மிகவும் ஆபத்தான குறுகிய வளைவுகளிலும் பாறைகள் சாலைகளில் விழுந்துள்ளன. மூன்று நாள்களாகியும் இதுவரை பாறைகளை அகற்றாததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே சாலையில் விழுந்துள்ள பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com