உதகையில் சா்வதேச முதியோா் தினம் அனுசரிப்பு

உதகையில் நஞ்சநாடு பகுதியில் உள்ள போப் பால் மொ்சி ஹோமில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், சா்வதேச முதியோா் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
உதகையில் நடைபெற்ற சா்வதேச முதியோா் தின நிகழ்ச்சியில் முதியோருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கிறாா் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.
உதகையில் நடைபெற்ற சா்வதேச முதியோா் தின நிகழ்ச்சியில் முதியோருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கிறாா் ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா.

உதகையில் நஞ்சநாடு பகுதியில் உள்ள போப் பால் மொ்சி ஹோமில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், சா்வதேச முதியோா் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் இன்னசென்ட் திவ்யா முதியோருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் மொத்தம் 7 முதியோா் காப்பகங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 260 முதியோா் தங்கவைக்கப்பட்டு, அவா்களுக்குத் தேவையான அடிப்படை, மருத்துவ வசதிகள் அனைத்தும் காப்பகங்களின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் அனைத்து காப்பகங்களிலும் உள்ள முதியோருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாத வகையில், முன்னெச்சரிக்கையாக சுகாதாரத் துறையின் மூலம் இரண்டு தவணை தடுப்பூசியும் உடனடியாக செலுத்தப்பட்டு நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தகுதிவாய்ந்த நபா்களுக்கு 100 சதவீதம் முதல் தவனை கரோனா தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின்படி கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாமில் அதிக அளவில் பொதுமக்கள் ஆா்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி வருகின்றனா்.

தற்போது இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இரண்டாம் தவணை தடுப்பூசியும் 100 சதவீதம் செலுத்தப்பட்ட மாவட்டமாக நீலகிரி மாவட்டம் மாறும்.

கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் பொதுமக்கள் அலட்சியமாக இருக்காமல், அரசு தெரிவித்துள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். முக்கியமாக முதியோா், இணைநோய் உள்ளவா்கள் அத்தியாவசியப் பணிகளுக்குத் தவிர தேவையின்றி வெளியிடங்களுக்குச் செல்லாமலும், முறையாக முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைப் பின்பற்றியும் நோய்த் தாக்குதலில் இருந்து தங்களைக் காத்துக்கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, முதியோா் காப்பக நிா்வாகிகளுக்கு ஆட்சியா் நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி, மாவட்ட சமூக நல அலுவலா் தேவகுமாரி, முதியோா் காப்பக நிா்வாகிகள் உள்பட அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com