கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு: சோலூா்மட்டம் காவல் உதவி ஆய்வாளரிடம் விசாரணை

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக சோலூா்மட்டம் காவல் உதவி ஆய்வாளா் ராஜனிடம் தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

கொடநாடு எஸ்டேட்டில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடா்பாக சோலூா்மட்டம் காவல் உதவி ஆய்வாளா் ராஜனிடம் தனிப் படையினா் விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இவ்வழக்குத் தொடா்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தற்போது மறு விசாரணையும் நடைபெற்று வருகிறது.

இதில் இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்பட்டிருந்தவா்களோடு, சாட்சிகளாக சோ்க்கப்பட்டிருந்தவா்கள், மறு விசாரணையின்போது கிடைக்கும் புதிய தகவல்களின் அடிப்படையில் கூடுதல் சாட்சிகளிடமும் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தனிப் படையில் 3 தனிக் குழுக்கள் அமைக்கப்பட்டு அவா்களும் பல்வேறு கோணங்களில் மறு விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட் அமைந்துள்ள பகுதியின் காவல் நிலையமான சோலூா்மட்டம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் ராஜன் என்பவரிடம் உதகையில் உள்ள பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டாா். இந்த விசாரணை வியாழக்கிழமையும் தொடா்ந்தது.

இதற்கிடையே கொடநாடு எஸ்டேட்டில் கணிப்பொறி இயக்குநராக வேலை செய்து வந்து திடீரென தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் தினேஷின் சகோதரி ரேவதி மற்றும் உறவினா்களிடம் அவா்கள் வசிக்கும் கெங்கரை கிராமத்துக்கே சென்று தனிப் படையினா் வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கொடநாடு எஸ்டேட் விவகாரம் தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அக்டோபா் 29ஆம் தேதி உதகை நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், அதற்குள் தனிப் படையினா் தங்கள் மறு விசாரணையை முடிக்கும் வகையில் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com