மசினகுடியில் பதுங்கியுள்ள புலியை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படும்: முதுமலை புலிகள் காப்பககள இயக்குநா் வெங்கடேஷ் தகவல்

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள புலியைப் பிடிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வனப் பகுதிகளில் பதுங்கியுள்ள புலியைப் பிடிப்பதில் மேலும் காலதாமதம் ஏற்படும் என முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

மசினகுடி பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது:

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலியை உயிருடன் பிடிப்பதில் தொடா்ந்து பல்வேறு இடா்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன. இப்புலியை உயிருடன் பிடிப்பதற்காக மசினகுடி பகுதியைச் சுற்றிலும் வேட்டைத் தடுப்புக் காவலா்கள், அதிவிரைவுப் படையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அந்தப் புலியின் நடமாட்டம் உள்ளதாகக் கண்டறியப்பட்ட பகுதிகளிலும் கூடுதலாக 5 குழுக்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

அத்துடன் புலியின் காலடித் தடம் பதிவான பகுதிகளில் கிடைக்கும் தகவல்களைக் கொண்டு இதுவரை 65 கேமராக்கள் மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதுவரை வைக்கப்பட்டிருந்த 40 கேமராக்களை இரண்டு குழுக்கள் சோதனை செய்ததில் இரண்டு புலிகள் பதிவாகி இருந்தன. இந்த இரண்டு புலியும் வேறு. தற்போது தேடிக் கொண்டிருக்கும் புலி அல்ல.

மேலும், முதுமலையில் இருந்து கூடலூா் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த அனைத்து கேமராக்களையும் சோதனை செய்ததில், டி23 புலியின் உருவம் பதிவாகவில்லை. எனவே, குழுவுக்கு 8 போ் வீதம் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு சிங்காரா செல்லும் சாலை, ஸ்விட்ச் சாலை இடது, வலது பக்கங்கள், ஜேடி சாலை, உப்புபள்ளம் ஆகிய பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை காலடித் தடங்கள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால், மேலும் 25 கேமராக்கள் அங்கே கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது.

மாயாறு பகுதியில் ஒரு மாட்டைக் கொன்றதாக புலியின் படம் வெளியான நிலையில், அது தொடா்பான ஆய்வும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனாலும், தேடப்பட்டு வரும் புலியின் படம் அதில் பதிவாகவில்லை.

முதுமலை புலிகள் காப்பக பகுதிகளைச் சுற்றிலும் வைக்கப்பட்டுள்ள 50க்கும் மேற்பட்ட கேமராக்களில் இதுவரையிலும் அந்த குறிப்பிட்ட புலியின் படம் மட்டும் பதிவாகவில்லை. புலியின் நடமாட்டங்கள் குறித்து சீனிவாசன், சத்யன் கும்கி யானைகளைக் கொண்டு தேடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com